Wednesday, November 14, 2012

துரதிர்ஷ்டம்

தோல்வி கண்டு துவண்டதில்லை 
துரதிர்ஷ்டம் கடைசி வரை 
துரத்தும் போதும் 
துவண்டு போகத் தெரியாமலே 
வளரத் தெரியாமல் 
வளர்ந்து விட்டேன்.

நேற்றும் துரதிர்ஷ்டம் துரத்தினாலும் 
அரண்டு போகும் சுற்றம் முன் 
என் கண் முன் தெரிந்தது 
வேறொரு மார்க்கம் தானே ஒழிய 
தோல்வி கண்டு துவண்டதில்லை.

ஆனால் துரதிர்ஷ்டம் 
ஏன் என்னை கடைசி வரை 
துரத்த வேண்டும்.
துரதிர்ஷ்டம் என்று ஒன்று 
இல்லை என்று அறிந்து 
கொள்ளத் தானோ!
ஏனோ! வளரத் 
தெரியாமலே 
வளர்ந்து விட்டேன்.

5 comments:

Thekkikattan|தெகா said...

வாவ்! ஓலை இது நீங்களேவா? ரொம்ப பிடிச்சிருக்கு... தொடர்ந்து விரட்டுவோம் துரதிருஷ்டத்தை :)

கலாகுமரன் said...

அதிர்ஷ்டம் என்று ஒன்று உள்ள போது துரதிர்ஷ்டம் இருக்கத்தானே செய்யும் நேர் - எதிர்

அதிர்ஷ்டத்தை எதிர் கொள்ளாதவனுக்கு துரதிர்ஷ்டம் தூசு மாதிரி.

ஓலை said...

தெகா! நன்றி. :-)
கலாகுமரன் ! உண்மைங்க. அதிர்ஷ்டம் என்னிக்குமே என் பக்கம் இருந்ததில்லை. :-)

பழமைபேசி said...

//Thekkikattan|தெகா said...
வாவ்! ஓலை இது நீங்களேவா? ரொம்ப பிடிச்சிருக்கு... தொடர்ந்து விரட்டுவோம் துரதிருஷ்டத்தை :)//

அதை விரட்டப் போயி, நீங்க காணாமப் போயிடாதீங்க. வீட்டுக்காரங்க பாவம்!!

ஓலை said...

பழமை! :-))