Thursday, February 16, 2012

கையில் வெறுமை

ராமு அசையாம கால் நீட்டிப் படுத்திருந்தான். விடிஞ்சா எப்போதும் போல நல்லா குளித்து விட்டு தனியா ஒரு நல்ல உடை உடுத்திச் செல்லனும். முப்பது வருஷ சர்வீஸ் முடிஞ்சு நாளை மதியம் அலுவலக நண்பர்கள் விடை கொடுத்து அனுப்பி விடுவார்கள். எப்போதும் retirement luncheon க்கு மனைவி குழந்தைகளோடு வரணும். குழந்தைகளுக்கு தகவல் சொல்லி விட்டு மனைவிக்கும் ஞாபகப் படுத்தி விட்டு வந்து கட்டிலில் படுத்தான்.

முப்பது வருட சர்வீஸ்ல் ராமு அதிகம் கலகலன்னு யாரிடமும் பழகியது கிடையாது. பேச்சும் உள்ளூர் மக்களைப் போல இல்லாமல் இந்திய மக்களது உச்சரிப்பையே உடல் உடன் ஒட்டி வந்ததாக நினைத்து தனது சிறு வயது பழக்கங்கள் இந்திய கலாசாரம் பண்பாட்டை விட்டுவிடக் கூடாது என்றே வாழ்ந்து விட்டான். இதனால் உள்ளூர் மக்களுடன் ஒட்டவில்லை. பதவியும் உயரவில்லை. ஆனால் அமைதியானவன் என்றே பெயர் எடுத்து கடைசி வரை இருந்து விட்டான்.

இருபது வருஷம் முன் கூட வேலை செய்த பெண்ணுடன் கொஞ்சம் அதிகம் பேசியதை தவறான கண்ணோட்டத்தில் பழகியதாக மனைவிக்கு யாரோ தகவல் சொல்லி விட்டனர். இதனால் வீட்டிலும் ஒன்றும் அலுவலக விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள முடியவில்லை.

பகிர்ந்தாலும் அந்த பெண் ஒட்டிய விஷயங்களைத் துழாவும் மனைவி. பேச்சு அதிகமானாலோ அல்லது குழந்தைகள் வாக்கு வாதம் செய்தாலோ, வேணும்னா அந்த இன்னொரு குடும்பத்தோடப் போய் வாழ வேண்டியது தானே என்பார்கள். ராமு வீட்டிலும் அமைதியாகி விட்டான். உள்ளூர் மக்களைப் போல விருப்பமில்லாத வீட்டிலிருந்து விலகி வாழ முடியாமல் தனது உள்ளுணர்வை அடக்கி வாழ முற்பட்டது இன்று வரைத் தொடர்கிறது.

ராமு இந்த நாள் இவ்வளவு சீக்கிரம் வரும் நினைக்க வில்லை. நாளையுடன் வேறுஒரு பழக்க வழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். படிப்பிலோ அல்லது இறை வழிபாட்டிலோ அல்லது என்ன தான் செய்யனும்னு இனி தான் யோசிக்க வேண்டும்.

ராமுக்கு retirement பெனிபிட் நன்றாகவே இருக்கு. சாப்பாட்டுக்கு தொல்லையில்லை. இருந்தும் ஒரு நிம்மதியற்ற நிலை. இருபது வருஷமாக கணவன் மனைவிக்குள் உன் பணம் என் பணம், வீட்டு கடனைப்பில் உன் பாதி என் பாதி, உன் கார் செலவு என் கார் செலவு என்றே ஓடி விட்டது. வங்கி கணக்கும் வேற, வரவு செலவுகளும் அவர் அவர்களுதே. ஆனால் ஒரே வீட்டில் இத்தனை காலம் தள்ளினார்கள் என்று இருவரும் யோசிக்கும் நிலையிலும் இல்லை.

குழந்தைகள் இந்தப் பிரச்சனை தன்னைத் தொடர வேண்டாம் என்று கல்யாணம் ஆனவுடன் தனியாகப் போய் விட்டார்கள். அவ்வப்போது இருபாலரும் appointment வாங்கி சந்தித்து வருகின்றனர். ஆதலால் ராமுவும் அவர்களைத் தொந்தரவு செய்வதில் விரும்ப மில்லாமலே இருந்தான்.

இந்த தடவை retirement பார்ட்டி க்கு அழைப்பு விடுத்தியிருந்தான். என்ன செய்வார்கள் என்று யாரும் சொல்ல வில்லை. மனைவியும் ஒன்றும் சொல்ல வில்லை.

காலை அமைதியாக விடிந்தது. யாரிடமும் ஒன்றும் பேசாமல் நல்ல உடை உடுத்தி வேலைக்கு கிளம்பினான். ஆபீஸ் டேபிள் காலி செய்து காரில் ஏற்றிக் கொண்டு வர வேண்டும் என்ற நினைப்புடன் இரண்டு காலி அட்டைப் பெட்டியை மட்டும் எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

மனது எதிலும் எடுபடவில்லை. வெறும் முகஸ்துதிக்காக எல்லோரிடமும் ஒரு வணக்கம் சொல்லி விட்டு வெளியே ஒரு நடை சுற்றி விட்டு வந்தால் நன்றாக இருக்கும் போல் தோன்றியது. எப்போதும் கண் முன் வரும் அந்த மரத்தடியின் நிழலில் சிறிது நின்றான். என்னமோ மனது அங்கு உட்கார வைத்தது இன்று. திரும்பி பேசாமல் வீட்டிற்குப் போய்விடலாமா என்று மனம் சிந்தித்தது.

மனைவி குழந்தைகள் வரா விட்டால் என்ன செய்ய? எப்பிடி அலுவலக நண்பர்களை சந்திப்பது என்றே யோசனை வாட்டியது. வருவது வரட்டும். இத்தனை காலம் இருந்த வாழ்க்கை தானே என்று சமாதானப் படுத்திக் கொண்டான்.

அமைதியாக எந்த வித முக மாற்றத்தையும் வெளிக்காமிக்காமல் ராமு அமைதியாக பார்ட்டி அறைக்குள் நுழைந்தான். ஆரவாரத்துடன் நண்பர்கள் வரவேற்று மாலை போட்டு வாழ்த்திப் பேசினார்கள்.

கடைசியாக ஒரு சின்னப் பரிசு என்று ஒரு மூலையிலிருந்த அறையின் கதவை முழுவதும் திறக்கச் சொன்னனர். முழுவதும் திறந்த போது மனைவியும் மக்களும் வந்து அணைத்துக் கொண்டனர்.

வழியனுப்பும் முன் நண்பர்கள், இனி இவர்கள் மட்டுமே உன்னை ஒருங்கிணைத்துச் செல்ல வேண்டும் என்று வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.

5 comments:

வானம்பாடிகள் said...

/ஒரு மூளையிலிருந்த /

பழமை வாத்தியாரு பிசின்னு குளிருட்டுப்போச்சு:))

நல்லாருக்கு சேது

ஓலை said...

பாலா சார்!

நன்றி. திருத்திட்டேன். இத்தனைக்கும் பதிவிடும்முன் இருமுறை படித்துப் பார்த்தேன். பையன் ரெண்டு நாளா மாத்ஸ்க்கு என்கிட்டே ஒட்டிகிட்டான். இருந்தும் இரண்டும் சரிவர செய்ய முடியல. :-)


பழமைக்கு இதெல்லாம் படிக்க நேரமில்லை. அவரை இழுத்து வரனும்.

பழமைபேசி said...

இங்க தமிழ்ச்சங்க வேலைங்க... அதான்

துளசி கோபால் said...

கடைசியில் கை மட்டும்தான் வெறுமை:-)))))

நல்லா இருக்கு.

ஓலை said...

நன்றிங்க! :-)